இறகெனும் நினைவுகள் .

ஈழ சூழலில் வழமையாக திரைப்பட கனவுகளுடன் குறும்படங்கள், காணொளி பாடல்கள் வெளிவந்துகொண்டிருக்கிற சூழ்நிலையில் புதிய முயற்சியாக கவிதைக் கானம் வெளியாகி இருக்கிறது.

நம்பிக்கை தரும் இளம் படைப்பாளி ஜெனோசன் ராஜேஸ்வரின் இயக்கத்தில் பத்மயன் சிவாவின் இசையில் உருவான ‘இறகெனும் நினைவுகள்’ கவிதைக் கானம் ஈழத்தில் வித்தியாசமான முயற்சி என பாராட்டுகளை பெற்று வருகிறது.

தர்ஷன், கெளசி ராஜ் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இக்கவிதைக் கானத்திற்கு வட்ஸு, தரு கங்காதரன், காயு அம்மு ஆகியோர் குரல் கொடுத்துள்ளார்கள். ஒளிப்பதிவு மற்றும் வரிகள் – வட்ஸு, படத்தொகுப்பு – கதிர். இன்னும் பல கலைஞர்கள் பணியாற்றியிருக்கும் இப்படைப்பு ‘சினிமா விகடன்’ வலைஒளி தளத்தில் வெளியிடப்பட்டிருப்பது மேலும் சிறப்பு.

கவிதை சொல்வதும் அதை கேட்பதற்குமான தளம் அருகிக்கொண்டிருக்கின்ற கால சூழ்நிலையில் அதற்கு உயிர் கொடுத்திருக்கிற ஜெனோசன் மற்றும் குழுவினருக்கு மாயவனின் அன்பும் பாராட்டுக்களும்.

4 Liked